search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவல் சண்டை"

    • ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
    • சோதனையில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் குமாரசாமி தெரு பகுதியில், சேவல் சண்டை நடைபெற்று வருவதாக ராசிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்து 5 சேவல்கள், ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக தட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25), குமாரசாமி தெருவைச் சேர்ந்த பெரியசாமி (32), அணைப்பாளையம் மூர்த்தி (30), கண்ணூர்பட்டி சதீஷ்குமார்(33), தட்டான்குட்டை கேசவன்(22), சந்திரசேகரன்(26), முள்ளுவாடிகேட் சுரேஷ் (32), முனியப்பன்(36), மணிமாறன்(35), லட்சுமணன்(40) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு அவர்களை ஜாமினில் விடுதலை செய்தனர்.

    • சிலர் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது.
    • போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த விடையூர் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சிலர் அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களில் சீனிவாசன், ஜானகிராமன், விக்னேஸ்வரன், பாலாஜி, பார்த்திபன், ஆசான்பாஷா உள்பட 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 560 கைப்பற்றினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையத்தில் சேவல் சண்டை நடப்பதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 8 சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்த சேலம் பகுதியைச் சேர்ந்த விமல் ( வயது 27), ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (23) ,கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (23) , கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் கான் (32) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 560 கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராவணாபுரம் ஈஸ்வரன் கோவில் அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    உடுமலை:

    உடுமலை அருகே ராவணாபுரம் ஈஸ்வரன் கோவில் அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்திய ராவணாபுரத்தைச் சேர்ந்த ராஜூ(வயது60), தேவனூர்புதூர் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(21), நெகமம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சேவல்கள் மற்றும் ரூ.350 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    ×